ADDED : ஜூலை 19, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மணலுார் அழகுமலர் மெட்ரிக் பள்ளியில் போலீசார் சார்பில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அலைபேசிகளில் நவீன வசதி பெருக பெருக அதனை வைத்து குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அலைபேசிகள் இல்லாத இளைய தலைமுறையே இல்லை. எனவே பள்ளி அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் எப்படி நடக்கின்றன, அதில் இருந்து மீள்வது, கண்டறிவது உள்ளிட்டவை குறித்து சிவகங்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையில் அழகுமலர் பள்ளியில் விழிப்புணர்வு நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாதுகாப்பு குறித்து ஏ.டி.எஸ்.பி.,விளக்கினார். தாளாளர் மலைச்சாமி, முதல்வர் யோகபுனிதா எஸ்.ஐ. , முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.