ADDED : ஜூலை 27, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : அகில உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தேவகோட்டையில் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.மரியன்னை பள்ளியில் தலைமையாசிரியை சார்லஸ்மேரி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பாத்திமாமேரி முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., பார்த்திபன், ஆனந்தா கல்லுாரி முதல்வர் ஜான் வசந்த் குமார், சேவுகன் அண்ணாமலை கல்லுாரி முதல்வர் நாவுக்கரசு, தேபிரித்தோ பள்ளி தலைமையாசிரியர் சேவியர்ராஜ், பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா, நகராட்சி துணை தலைவர் ரமேஷ், உதவி தலைமையாசிரியை குடியரசி, மெட்ரிக் பள்ளி முதல்வர் கரோலின் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி பேசினர். ்