ADDED : மார் 25, 2024 07:17 AM
சிவகங்கை, காளையார்கோவிலில் வருவாய்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி சைக்கிள் ஊர்வலம் நடந்தது. காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் ஊர்வலத்தை தாசில்தார் முபாரக் உசேன் துவக்கி வைத்தார்.
யூனியன் ஆபிஸ் ரோடு, மதுரை ரோடு வழியாக நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வரை சென்று, அப்பகுதி மக்களுக்கு ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு அளித்தனர். துணை தாசில்தார் நாகேந்திரகுமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.
திருப்புத்துார்
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண பெருமாள் துவக்கினார். மாற்றுத்திறனாளிகள் நடைபயணமாகவும், மூன்று சக்கர வாகனத்திலும் பங்கேற்றனர். தாசில்தார் மாணிக்கவாசகம், தனி ஆர்.ஐ., ரமேஷ், வி.ஏ.ஓ., வினோத் உதவியாளர்கள் பங்கேற்றனர்.

