ADDED : ஜூன் 27, 2024 11:38 PM
தேவகோட்டை : தேவகோட்டை வட்டார சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். டி.எஸ்.பி.பார்த்திபன் துவக்கி வைத்தார்.
மாணவர்கள், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கணேசமூர்த்தி, வேலாயுதபட்டினம் மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், உதவி மருத்துவர் அழகுதாஸ், வக்கீல் ஹரிபிரசாத், ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன் பங்கேற்றனர்.
* ஆனந்தா கல்லுாரியில் செயலாளர் செபாஸ்டின் தலைமையில் முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலையில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தாசில்தார் அசோக்குமார், வி.ஏ.ஓ.க்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ஜோசப் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை, விபத்து தடுப்பு விழிப்புணர்வு குழு இணைந்து நடத்தினர். தாளாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். டி.எஸ்.பி.பார்த்திபன் முன்னிலை வகித்தார். விபத்து தடுப்பு குழு அமைப்பாளர் ஏகோஜிராவ், முதல்வர் ஆரோக்கியவளவன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் பங்கேற்றனர்.

