ADDED : ஜூலை 21, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை; தேவகோட்டை முகமதியர்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சித்திக் தலைமையில் நடந்தது. நகர தலைவர் உமர், செயலாளர் நாசிர், பொருளாளர் ராஜாமுகமது முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகிகள் தலைமை பேச்சாளர்கள் அப்துல் ரகுமான், ஹாரிஸ் பேசினர். கூட்டத்தில் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கு ஏழு சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.