ADDED : ஆக 12, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழக முதல்வர் காணொளி வாயிலாக போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித், கோட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, ஏ.டி.எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் உள்ளிட்டோர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன்உறுதி மொழி எடுத்துகொண்டனர்.

