ADDED : செப் 03, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ் தலைமையில் நடந்தது.
மாவட்ட அரசு சிறப்பு வக்கீல் துஷாந்த் பிரதீப் குமார், சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின், கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், தாசில்தார் முருகன், இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் பேசினர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் தீண்டாமை மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். டி.எஸ்.பி., ஆத்மநாதன் நன்றி கூறினார்.