ADDED : ஆக 27, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : அழகப்பா பல்கலை படிப்பு வட்டம் வேலைவாய்ப்பு மையம் மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப் சார்பில் இந்திய வரலாற்றுக் காலகட்டங்கள் என்ற தலைப்பில் வினாடி-வினா மற்றும்இளைஞர் எழுச்சியை நோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியர் சாந்தி வினாடி-வினா போட்டியை நடத்தினார்.
இளைஞர் எழுச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி, காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப் தலைவர்கார்த்திகேய சுவாமி, திருச்சி சுங்க ஆணைய கூடுதல் ஆணையாளர் திலீபன் பேசினர். அழகப்பா பல்கலை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராம் வாழ்த்தினார். பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். ரோட்டரி கிளப் செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.