/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
/
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 22, 2024 06:21 AM
மானாமதுரை : காளையார்கோயில் அருகே விளாக்குளத்தில் பூர்ண, புஷ்கலா தேவி சமேத நிறைகுளத்து அய்யனார், செல்வகணபதி, முருகன், கருப்பணசாமி, காளியம்மன், வீரமாகாளி, தர்ம முனீஸ்வரர், குருவய்யா, ஆஞ்சநேயர், குதிரை வாகனம் மற்றுமுள்ள 21 பந்தி 61 சேனைகளின் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
ஏப்., 19 ல் கணபதி ஹோமத்துடன் முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து 4கால பூஜைகள் நடைபெற்று முடிந்து நேற்று காலை கும்பாபிஷேக விழாவிற்காக சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக மேள, தாளங்கள் முழங்க கொண்டு சென்று கோயில்களின் கோபுரங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
அபிஷேக, ஆராதனைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. விளாக்குளம் கிராமத்தினர் விழா ஏற்பாட்டை செய்தனர்.

