/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆ.விளாக்குளம் மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
/
ஆ.விளாக்குளம் மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
ஆ.விளாக்குளம் மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
ஆ.விளாக்குளம் மஞ்சுவிரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயம்
ADDED : ஜூன் 27, 2024 11:43 PM

மானாமதுரை : ஆ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்திற்கு எதிரே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார், ராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி, நடிகர் ஆர்.கே.,சுரேஷ் துவக்கி வைத்தனர்.
போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. மாடுகளைப் பிடிக்க 120 வீரர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்கபட்டது. மாடுகள் முட்டியதில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.