ADDED : செப் 07, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே நெடுமரத்தில் ஊரணியில் மூழ்கி இறந்தவரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருப்புத்துார் ஒன்றியம் நெடுமரம் கருப்பையா மகன் கிருஷ்ணன்55. இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் நெடுமரம் அருகில் புதுக்கோட்டை ரோட்டோரத்தில்
உள்ள நெடுங்குண்டு ஊரணியில் குளித்தார். குளிக்கச் சென்றவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் போலீசில் தெரிவித்தனர்.
திருப்புத்துார் தீயணைப்புத்துறையினர் இரவில் ஊரணியில் தேடினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.
நேற்று காலை மீண்டும் ஊரணிக்கு சென்று மூழ்கிய கிருஷ்ணனின் உடலை மீட்டனர். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.