ADDED : ஏப் 29, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை, வெளிமுத்திவிலக்கில் உள்ள மகா பிருத்யங்கிரா தேவி கோயிலில் பஞ்சமியை முன்னிட்டு பால்குட உற்சவம் நடந்தது. பக்தர்கள் அட்சய மகா கணபதி சன்னதியில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அம்பிகைக்கு பால் அபிேஷகம் செய்தர். பெண்கள் பூத்தட்டு எடுத்து பூச்சொரிதல் விழா நடத்தினர். கோயில் நிர்வாகி கருப்பு குருக்கள் ஏற்பாட்டை செய்தார்.

