/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டு எண்ணும் மையங்களில் 'ட்ரோன்' கேமரா பறக்க தடை
/
ஓட்டு எண்ணும் மையங்களில் 'ட்ரோன்' கேமரா பறக்க தடை
ADDED : ஏப் 29, 2024 11:52 PM
சிவகங்கை : லோக்சபா தேர்தல் ஓட்டுக்கள் எண்ணும் மையங்களுக்கு மேல் பகுதியில் 'ட்ரோன் கேமரா' பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஏப்., 19 ல் ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாடு, ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் ஓட்டுப்பெட்டிகள் உள்ள 'ஸ்ட்ராங்க்' ரூம்களுக்கு முன் துணை ராணுவ படை உட்பட 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர ஓட்டு எண்ணும் மைய வளாகத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஓட்டு எண்ணும் மையங்கள் உள்ள பகுதியில் இருந்து 2 கி.மீ., துார சுற்றளவிற்குள் 'ட்ரோன் கேமரா' பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

