/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'104'ஐ தாண்டி கொளுத்தும் வெயில் சருகாய் மாறி அச்சுறுத்தும் மரங்கள்
/
'104'ஐ தாண்டி கொளுத்தும் வெயில் சருகாய் மாறி அச்சுறுத்தும் மரங்கள்
'104'ஐ தாண்டி கொளுத்தும் வெயில் சருகாய் மாறி அச்சுறுத்தும் மரங்கள்
'104'ஐ தாண்டி கொளுத்தும் வெயில் சருகாய் மாறி அச்சுறுத்தும் மரங்கள்
ADDED : ஏப் 08, 2024 05:51 AM

சிங்கம்புணரி : தமிழகத்தில் 104 டிகிரியை தாண்டி கொளுத்தும் கோடை வெயிலால் எப்போதும் பசுமையாக காட்சிதரும் பிரான்மலையில் இருந்த மரங்கள் சருகுகளாய் மாறி அச்சுறுத்துகிறது.
தமிழகத்தில் இந்தாண்டு கோடை வெப்பம் கடுமையாக தாக்கி வருகிறது. சித்திரை பிறப்பதற்கு முன்னரே ஆதவனின் அனல்கக்கும் வெப்பம் பூமியில் முத்திரையை பதித்து வருகிறது. இந்நிலையில் சிங்கம்புணரி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 104 பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பிரான்மலை, மேலவண்ணாரிருப்பு மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் வளர்ந்திருந்த மரங்கள் அனைத்தும் காய்ந்து சருகாய் காட்சிதருகிறது. செடி, புதர், புல் அனைத்தும் கருகிவிட்டதால் காட்டுத்தீ பரவும் அபாயமும் நிலவுகிறது. எனவே வனத்துறையினர் பிரான்மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு செல்லும் நபர்கள், 'குடி'மகன்களை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில் மலைகள், மேலவண்ணாரிருப்பு உள்ளிட்ட மலைச்சாலைகளின் இருபுறமும் கோடை வெயிலின் போது பூத்துக் குலுங்கும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நட வேண்டும்.

