/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
/
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
ADDED : மார் 22, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சங்கர், உதவி ஆணையர் ஞானசேகரன், தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
11 உண்டியல்களில் 32 லட்சத்து 69 ஆயிரத்து 315 ரூபாயும், 223 கிராம் தங்கமும், 280 கிராம் வெள்ளியும், கோசாலை உண்டியலில் 75 ஆயிரத்து 560 ரூபாயும் காணிக்கையாக கிடைத்தன. கண்காணிப்பு பணியில் ஆய்வர் முத்துமுருகன், கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஈடுபட்டிருந்தனர்.

