/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்பானையிலும் பிரியாணி சாப்பிடலாம்; மானாமதுரையில் தயாராகுது
/
மண்பானையிலும் பிரியாணி சாப்பிடலாம்; மானாமதுரையில் தயாராகுது
மண்பானையிலும் பிரியாணி சாப்பிடலாம்; மானாமதுரையில் தயாராகுது
மண்பானையிலும் பிரியாணி சாப்பிடலாம்; மானாமதுரையில் தயாராகுது
ADDED : ஜூன் 16, 2024 10:21 PM

மானாமதுரை : மானா மதுரையில் மண்ணாலான பிரியாணி கிண்ணங்கள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருள்களை தயார் செய்து வருகிற நிலையில் தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏராளமானோர் மண்பாண்ட சமையலுக்கு மாறியுள்ள நிலையில் ஓட்டல்களிலும் மண்பாண்ட சமையல்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரியாணி கடைகளில் சிக்கன், மட்டன், முட்டை பிரியாணி வகைகளை மண்ணாலான கிண்ணங்களில் வைத்து பாரம்பரிய முறைப்படி வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வருவதை புதுவிதமாக கையாண்டு வருகின்றனர்.
இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மண்பாண்ட பொருட்களுக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் மண்ணாலான பிரியாணி கிண்ணங்கள் தயாரிப்பதற்கு ஏராளமான ஓட்டல் உரிமையாளர்கள் ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தற்போது மானாமதுரையில் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் கலைநயமிக்க வடிவில் பிரியாணி கிண்ணங்களை தயாரித்து வருகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மண்ணால் செய்யப்படும் கிண்ணத்தில் பிரியாணியை பரிமாறும் போது இயற்கையான மண்வாசனையோடு பிரியாணியும் வாசனையாக இருப்பதினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆசைப்பட்டு பிரியாணி வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.
மேலும் ஆன்லைனில் ஆர்டர்கள் செய்பவர்களுக்கும் மண்ணாலான கிண்ணங்களில் பிரியாணி பேக்கிங் செய்தும் கொடுத்து வருவதால் கிண்ணங்கள் தயாரிப்பதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். மதுரை, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு மண்பானை கிண்ணங்களை அனுப்பி வருகிறோம்.

