/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு உரிய பங்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் உறுதி
/
பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு உரிய பங்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் உறுதி
பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு உரிய பங்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் உறுதி
பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு உரிய பங்கு பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் உறுதி
ADDED : ஏப் 12, 2024 04:45 AM
சிவகங்கை: விவசாயிகள் நலன் கருதி பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு கிடைக்கும் 60 கன அடி நீரை முழுமையாக பெற்றுத் தருவேன் என மதகுபட்டியில் பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் பேசினார்.
அவர் பேசியதாவது: காங்., வேட்பாளர் வெற்றிக்கு தி.மு.க.,வினர் கஷ்டப்பட்டு பணிபுரிகின்றனர். 40 ஆண்டுகளாக காங்.,க்கு ஓட்டளித்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பா.ஜ.,வை ஆதரித்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம். இத்தொகுதியில் 40 ஆண்டாக எந்தவித வளர்ச்சி பணி, தொழிற்சாலை கூட வரவில்லை. மருது சகோதரர்கள் சிலை நிறுவப்படும். வேலுநாச்சியார் பெயரில் மத்திய பல்கலை கழகம் கொண்டு வருகிறோம். தொகுதியில் சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு சின்னம் அமைக்கப்படும்.
கலாசாரத்தை காக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு முழு அனுமதி பெற்றுத்தரப்படும். பெரியாறு அணையில் இருந்து சிவகங்கைக்கு வர வேண்டிய பங்கு தண்ணீரை முழுமையாக பெற்றுத்தரப்படும், என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், மாவட்ட செயலாளர் மார்த்தாண்டன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், சட்டசபை பொறுப்பாளர் சிதம்பரம், சசிக்குமார், மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி, கந்தசாமி, சங்கர சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் லோகு, அ.தி.மு.க., தொண்டர் மீட்பு குழு இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், முத்துராமலிங்கம், சேகர், யாதவ மகா சபை நிர்வாகிகள், ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் லட்சுமணன், உறுப்பினர் பச்சமுத்து, அ.ம.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, தமிழ் தேச கட்சி மாவட்ட செயலாளர் தியாகராஜன், ஒன்றிய செயலாளர் கார்த்திக் பங்கேற்றனர்.

