/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானகிரி 4 வழிச்சாலை சந்திப்பில் பாதுகாப்பிற்காக தடுப்பு அவசியம்
/
மானகிரி 4 வழிச்சாலை சந்திப்பில் பாதுகாப்பிற்காக தடுப்பு அவசியம்
மானகிரி 4 வழிச்சாலை சந்திப்பில் பாதுகாப்பிற்காக தடுப்பு அவசியம்
மானகிரி 4 வழிச்சாலை சந்திப்பில் பாதுகாப்பிற்காக தடுப்பு அவசியம்
ADDED : ஆக 12, 2024 04:32 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே மானகிரி பைபாஸ் 4வழிச்சாலை சந்திப்பு ரோட்டில் தொடர் விபத்துகளை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. காரைக்குடி நுழைவாயிலான ஓ.சிறுவயல், மானகிரி, சூரக்குடி சந்திப்புகள் உள்ளன. நான்கு சாலை சந்திப்புகளான இச்சாலைகளில் அடிக்கடி தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் வரும் வாகனங்களை கவனிக்காமல், வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. அடிக்கடி நடக்கும் விபத்துகளால் பல்வேறு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நான்கு சாலை சந்திப்பில் முறையாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கவும், ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்தப்பட்ட தடுப்புகள் அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மற்ற இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மானகிரி பைபாஸில் முறையான மின்விளக்கு மற்றும் தடுப்புகள் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.