நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். அரசு மருத்தவமனை ரத்த வங்கி அலுவலர் ராஜ்குமார், கவுரவ ஆலோசகர் சின்னத்துரை முன்னிலை வகித்தனர்.
மெய்யப்பன் முகாமை துவக்கி வைத்தார். ரத்ததானம் செய்தோருக்கு சான்று வழங்கினர்.

