/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை சாம்பியன்
/
குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை சாம்பியன்
ADDED : செப் 04, 2024 12:52 AM
சிவகங்கை : சேலம் மாவட்டத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் 11 தங்கம் 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
சேலம் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே சேலம் குரங்குசாவடி தனியார் பள்ளியில் குத்துச்சண்டை போட்டி நடந்தது. சங்க பொது செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்தார். 100க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். சிவகங்கை சார்பாக பயர் ஸ்டார்ம் பைட் கிளப் வீரர்கள் 29 பேர் பயிற்சியாளர் குணசீலன் தலைமையில் பங்கேற்றனர்.
முடிவில் 11 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். நகராட்சி தலைவர் துரைஆனந்த் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். பயிற்சியாளர்கள் தீணாதயாளன், சித்ரா கலந்து கொண்டனர்.