/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரமனுார் பாதை மூடல் கிராம மக்கள் தவிப்பு
/
பிரமனுார் பாதை மூடல் கிராம மக்கள் தவிப்பு
ADDED : மே 25, 2024 05:32 AM
திருப்புவனம், : திருப்புவனத்தில் இருந்து பிரமனுார் செல்லும் பாதையை நெடுஞ்சாலைத்துறை முன்னறிவிப்பின்றி மூடி பராமரிப்பு பணி மேற்கொள்வதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பிரமனூர், பனையனேந்தல், வன்னிகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள், பொதுமக்கள் திருப்புவனம் புதுார் வழியாக வருவது வழக்கம், திருப்புவனம் புதூரில் வளைவில் திரும்பும் இடத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் அகலம் குறைவாக இருப்பதால் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் ரோட்டில் செல்கிறது
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று மாலை நான்கு மணிக்கு முன்னறிவிப்பின்றி பணிகளை மேற்கொண்டனர். இதனால் எந்த வாகனமும் இப்பாதையை பயன்படுத்த முடியவில்லை.
கிராமமக்கள் பலரும் நரிக்குடி ரோடு வழியாக நான்கு வழிச்சாலை சென்று அதன்பின் கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.
பாதை அடைக்கப்பட்டது தெரியாமல் பலரும் திருப்புவனம் புதுார் வரை வந்து மீண்டும் திரும்பி நான்கு வழிச்சாலை வழியாக திருப்புவனம் நகருக்கு வந்து செல்கின்றனர்.

