/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரியாவிடை நாயனார் கோயில் விழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
/
பிரியாவிடை நாயனார் கோயில் விழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
பிரியாவிடை நாயனார் கோயில் விழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
பிரியாவிடை நாயனார் கோயில் விழா மே 13ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : மே 10, 2024 04:55 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வடவன்பட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பொன்னா விடைச் செல்வி பிரியாவிடை நாயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பத்து நாள் மண்டப்படியாக தினமும் சிறப்பு வழிபாடு, சுவாமி உற்ஸவம் நடக்கிறது.
மே 20ம் தேதி சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணமும், மே 21ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. தேரோட்டம் அன்று அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி அம்பாள் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
மே 22ல் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் நாட்டார்கள் செய்து வருகின்றனர்.