ADDED : செப் 12, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாண்டித்துரை 50. இவர் நேற்று, தேவகோட்டையில் இருந்து நேமத்தான்பட்டிக்கு பைக்கில் சென்றார்.
பேயன்பட்டி அருகே சென்ற போது, பைக்கின் முன்னே சென்ற கார் திடீரென்று நின்றது. அதைப் பார்த்த பாண்டித்துரை பைக்கை, நிறுத்தியபோது பைக் நிலைதடுமாறியதில் ரோட்டின் நடுவில் விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரி, பாண்டித்துரை மீது ஏற்றாமல் இருக்க லாரியை திருப்பிய போது லாரி பாண்டித்துரையின் கால் மீது ஏறியதோடு சாலையோரம் கவிழ்ந்தது. கால்கள் இரண்டும் நசுங்கிய நிலையில் பாண்டித்துரை சிகிச்சைக்காக காரைக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லாரியை ஒட்டி வந்த தேவகோட்டையைச் சேர்ந்த போஸ்கோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

