/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்
/
தேவகோட்டையில் மாட்டு வண்டி பந்தயம்
ADDED : மே 02, 2024 05:19 AM

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சித்தானூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. விழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இரு பிரிவாக நடந்த பந்தயத்தில் 18 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு கேடயம்,ரொக்கம் பரிசாக பெற்றனர்.
வெங்களூர் சேகரம் இரக்காட்டி முத்துமாரியம்மன் கோயில் மது எடுப்பு விழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி மது எடுத்து வந்து கோயிலில் அம்மன் முன் வைத்து வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு நேற்று 16 மாட்டு வண்டிகள் பங்கேற்ற மாட்டு வண்டி பந்தயங்கள், 13 குதிரைகள் பங்கேற்ற குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

