ADDED : மார் 03, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 9 ஜோடிகளும், சின்ன மாட்டு பிரிவில் 18 ஜோடிகளும் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரியமாட்டிற்கு 8 கி.மீ., துாரமும், சின்ன மாட்டிற்கு 6 கி.மீட்டர் துாரமும் பந்தய எல்லையாக நிர்ணயித்தனர். வெற்றிபெற்ற வண்டி உரிமையாளருக்கு பரிசு வழங்கினர்.