ADDED : மார் 07, 2025 08:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் அழகிய மெய் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 44 ஜோடி மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. இரு பிரிவாக நடந்த போட்டியில் பெரிய மாட்டு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடந்த சின்ன மாட்டு பிரிவில் 30 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கும் அதை ஓட்டிவந்த சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.