ADDED : மார் 25, 2024 05:58 AM

சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலையில் உள்ள, சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மலைமருந்தீஸ்வரர், முனிநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 15 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மார்ச் 22ல் மலைமருந்தீஸ்வரர் பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. மார்ச் 23 ல் பால்குட ஊர்வலம், காவடி எடுப்பு நடந்தது. பக்தர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாளுடன் மலைமருந்தீஸ்வரரும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், விநாயகர், சண்டீகேஸ்வர் தனித்தனி சப் பரத்தில் எழுந்தருளினர். தேர் ரத வீதி வழியாக வந்து நிலையை அடைந்தது. பிறகு மீண்டும் தடம் பார்க்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. இரண்டு பிரிவாக நடைபெற்ற பந்தயத்தில் 48 ஜோடி மாடுகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

