/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
/
கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஆக 17, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
இங்குள்ள சடையாண்டி கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மறவர் பேரவை சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. முட்டாக்கட்டியில் இருந்து சிங்கம்புணரி வரை பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் 21 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மாட்டுவண்டி பந்தயத்தை ஊர் அம்பலங்கள் துவக்கி வைத்தனர்.
இரண்டு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்கள் சாரதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.