/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்
/
அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்
ADDED : ஜூலை 05, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி ஐயுளி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கழனிவாசல் பகுதியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக கழனிவாசலை சேர்ந்த கணேசன் 42, உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி தெற்கு தெருவில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததாக வி.ஏ.ஓ., சேவுகன் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு தெருவை சேர்ந்த ஐயப்பன், சிவா, ரத்தினம், ஆறுமுகம், ரவிக்குமார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.