/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்
/
மானாமதுரை கோயில் அருகே எரிந்த பட்டுப்போன மரம்
ADDED : மார் 27, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அண்ணாத்துரை சிலை பாலம் இறக்கத்தில் உள்ள விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகில் பயன்பாடற்ற கட்டடங்களுக்கு அருகில் இருந்த பட்டுப்போன மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் கடந்த 2 நாட்களாக சிலர் தொடர்ந்து தீ வைத்து வந்துள்ளனர். அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு மற்றொரு மரத்திற்கு சிலர் தீ வைத்து சென்றதை தொடர்ந்து மரம் தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்பகுதியில் இருந்தவர்கள் மானாமதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

