தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அடிப்படை வசதி இன்றி பஸ் பயணிகள் அவதி

அடிப்படை வசதி இன்றி பஸ் பயணிகள் அவதி

அடிப்படை வசதி இன்றி பஸ் பயணிகள் அவதி


ADDED : ஏப் 10, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: கோடை ஆரம்பித்த நிலையில் குடிக்க தண்ணீர் இன்றியும் எந்த ஒரு அடிப்படை வசதியின்றி சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சிவகங்கையில் இரண்டு அரசு கலைக்கல்லுாரி, மாவட்ட நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி.அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள் உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து சரசாரியாக தினசரி 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் வழியாக சிவகங்கை வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினசரி ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்துார், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் குடிப்பதற்கு குடிநீர் வசதி கிடையாது. பஸ் ஸ்டாண்ட் முழுவதும் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது.

பயணிகள் அமர்வதற்கு முறையான இருக்கை வசதி கிடையாது. பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் தனியார் வாகனங்கள் ஆங்காங்கே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

பஸ் உள்ளே வந்து வெளியே செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் காளையார்கோவில் பஸ் நிற்கும் இடத்தில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்துகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சப்படுகின்றனர். மாவட்டத்தின் தலைநகரில் இருக்கக்கூடிய சிவகங்கை பஸ் ஸ்டாண்ட்டை விரைவில் பராமரித்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us