/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடுக்குமாடி குடியிருப்பு பெற நாளை முகாம்
/
அடுக்குமாடி குடியிருப்பு பெற நாளை முகாம்
ADDED : ஆக 01, 2024 04:38 AM
மானாமதுரை: மானாமதுரை சமத்துவபுரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.இக்குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெறுவதற்கான பயனாளிகள் முகாம் நாளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பயனாளிகளுக்குரிய தகுதிகள்: பயனாளி மற்றும் பயனாளியின் குடும்பத்தினர் பெயரில் சொந்த இடமும் குடியிருப்பு எங்கும் இருத்தல் கூடாது.பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மானாமதுரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
தற்சமயம் ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகள் குடியிருப்புகளை பெறுவதற்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியம் நீங்கலாக பயனாளியின் பங்களிப்பு தொகையினை செலுத்த வேண்டும். இத்தகுதி உடைய பயனாளிகள் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை.
குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பயனாளியின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பயனாளியின் வங்கி கணக்கு புத்தக நகல், பயனாளி பங்களிப்புத் தொகை செலுத்துவேன் எனும் உறுதிமொழி கடிதம் ஆகியவற்றுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.