/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முழுமையாக துார் வாரப்படாத கால்வாய்கள்: விவசாயிகள் புகார்
/
முழுமையாக துார் வாரப்படாத கால்வாய்கள்: விவசாயிகள் புகார்
முழுமையாக துார் வாரப்படாத கால்வாய்கள்: விவசாயிகள் புகார்
முழுமையாக துார் வாரப்படாத கால்வாய்கள்: விவசாயிகள் புகார்
ADDED : நவ 07, 2024 01:36 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள கால்வாய்களை முழுமையாக துார் வாராததால் மழை நீர் வந்தும் கண்மாய்களுக்கு சென்றடையவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் திருப்புவனம் வட்டார கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றில் இருந்து ஒவ்வொரு கண்மாய்க்கும் மூன்று முதல் பத்து கி.மீ.,துாரத்திற்கு நீர் வரத்து கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள 42 கண்மாய்களை துார் வார கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு கண்மாய்க்கும் 80 லட்சம் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை கண்மாய் பரப்பளவிற்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மடைகளை சீரமைத்தல் கண்மாய் மற்றும் கால்வாய்களை தூர் வாருதல் போன்ற பணிகள் நடந்தன. ஆனால் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி விட்டு தூர் வார விவசாயிகள் வலியுறுத்திய நிலையில் பொதுப்பணித்துறையினர் பணிகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயி பாரத்ராஜா கூறுகையில்: கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவைகளில் வளர்ந்துள்ள நாணல்கள், கருவேல மரங்கள் ஆகியவற்றை அகற்றி துார்வாரினர். ஆனால் அகற்றப்பட்ட கருவேல மரங்கள் நாணல்களை அப்படியே கால்வாயிலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதனால் மழைத்தண்ணீர் வந்தும் முழுமையாக கண்மாய்களுக்கு சென்று சேரவில்லை.
மேலும் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இறங்கி சரி செய்யவும் முடியவில்லை. தற்போதைய மழை நீர் காரணமாக திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள ஒருசில கண்மாய்களை தவிர மற்ற கண்மாய்களில் ஐம்பது சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது.
பிரமனூர், மாரநாடு உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி விட்டன. கால்வாய்களை முழுமையாக தூர் வாரி இருந்தால் கூடுதல் தண்ணீரை சேமித்து இருக்கலாம், என்றார்.