/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் விதிமுறைகளை மீறி கொடிகளுடன் கார்கள் வலம்
/
தேர்தல் விதிமுறைகளை மீறி கொடிகளுடன் கார்கள் வலம்
ADDED : மார் 27, 2024 06:48 AM
காரைக்குடி : காரைக்குடி மற்றும் புதுவயல் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி கொடிகளுடன் கார்கள் வலம் வருகிறது.
ஓட்டுப் பதிவு ஏப்.19 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. விதிகளின்படி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்படும். இதே போல், தேர்தல் விதிகளின்படி கார்களில் கட்சி கொடி கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். ஆனால் காரைக்குடி மற்றும் புதுவயல் பகுதிகளில் கட்சிக்கொடி பயன்படுத்தி ஏராளமான கார்கள் வலம் வருகிறது.
தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கூறுகையில்;
தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். சிலர் அதற்கான அனுமதி பெற்றுள்ளனர், அனுமதி பெறாத வாகனங்களில் கட்சிக்கொடி இருந்தால் அதை கண்காணித்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

