/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 133 பேர் மீது வழக்கு
/
சிவகங்கையில் 133 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 14, 2024 10:57 PM
சிவகங்கை : ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதையொட்டி போலீஸ் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பணி தொடங்கப்பட்டது.
முதற்கட்டமாக மாவட்டத்தில் பிரச்னைக்குரிய கிராமங்கள் குறித்து போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர். ரவுடிகள், பிரச்னைக்குரிய நபர்கள், சந்தேகத்திடமான நபர்கள், பழைய குற்றவாளிகள் மற்றும் பிரச்னையில் ஈடுபடுவதாக அறியப்பட்டவர்கள் மீது 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் இறுதி வரை 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்புத்துார், தேவகோட்டை உள்ளிட்ட பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

