/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பனை மரங்கள் அகற்றம் தொடர்பாக வழக்கு பதிவு: உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
பனை மரங்கள் அகற்றம் தொடர்பாக வழக்கு பதிவு: உயர்நீதிமன்றத்தில் தகவல்
பனை மரங்கள் அகற்றம் தொடர்பாக வழக்கு பதிவு: உயர்நீதிமன்றத்தில் தகவல்
பனை மரங்கள் அகற்றம் தொடர்பாக வழக்கு பதிவு: உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூலை 01, 2024 10:00 PM
மதுரை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கீழ உச்சாணியில் பனை மரங்களை அகற்றியது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
திருவேகம்பத்துார் அன்னம்மாள் தாக்கல் செய்த பொதுநல மனு:
கீழ உச்சாணியில் பனை மரங்கள் அதிகமாக உள்ளன. உரிமம் பெறாமல் சில செங்கல் சூளைகள் செயல்படுகின்றன. இதன் பயன்பாட்டிற்காக பனை மரங்களை சிலர் அகற்றுகின்றனர். அவற்றை பாதுகாக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துஉள்ளது. இது பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களுக்கு இல்லை.
மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், சிவகங்கை கலெக்டர், தேவகோட்டை ஆர்.டி.ஓ.,திருவேகம்பத்துார் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். உரிமம் இன்றி செயல்படும் செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: ஆர்.டி.ஓ.,திருவேகம்பத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர், கீழ உச்சாணி ஊராட்சி தலைவர் விசாரித்து, சர்வே செய்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.