ADDED : ஆக 20, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காவிரி கூட்டுகுடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக (ஆக.,20) இன்றும், நாளையும்(ஆக.,21)ஆகிய இரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
காவிரி கூட்டுகுடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் உள்ள திருச்சி முத்தரசநல்லுாரில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக, காவிரி குடிநீர் செல்லும் பிரதான குழாய்களில் கசிவுகள் சரி செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்வினியோகம் இருக்காது என்றார்.

