/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி
/
சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி
சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி
சிமென்ட் ரோடு அமைக்கப்படும்: உயர்நீதிமன்றத்தில் உறுதி
ADDED : ஆக 27, 2024 01:51 AM
மதுரை, ஆக.27-
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் கண்ணன்.
இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: காளையார்கோவிலிலில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் சிமென்ட் ரோடு அமைக்கக்கோரி ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: சிமென்ட் ரோடு அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் ரோடு அமைக்கப்படும். அதற்குரிய நிதி உள்ளது என ஊராட்சித் தலைவர் தரப்பு தெரிவித்துள்ளது. இதை பதிவு செய்து வழக்கு முடிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.