ADDED : பிப் 22, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் கிழக்குப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சின்னம்மாள் 68.
இவர் தனியார் கல்லூரியில் துாய்மை பணியாளராக வேலை பார்க்கிறார். வேலை முடித்து வரும்போது வயலில் இருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார்.
அப்போது பின்னால் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர் சின்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தாலி செயினை பறித்துச் சென்று விட்டார். சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.