ADDED : ஆக 07, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவிலுார் திருநெல்லையம்மன் உடனாகிய கொற்றாளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவ விழா ஜூலை 29ம் தேதி திருநெல்லையம்மனுக்கு காப்புகட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.
விநாயகர், முருகன் தேர் முதலில் செல்ல தொடர்ந்து திருநெல்லையம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இன்று தபசு நிகழ்ச்சி, நாளை திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி திருவீதி உலா, ஆக.9ம் தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது.