/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் பிரமோற்ஸவம் ஏப்.23ல் தேரோட்டம்
/
திருக்கோஷ்டியூர் பிரமோற்ஸவம் ஏப்.23ல் தேரோட்டம்
ADDED : ஏப் 21, 2024 04:15 AM
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு ஏப்.23ல் தேரோட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சித்திரையில் பிரமோற்ஸவம் 12 நாட்கள் நடைபெறும். ஏப்.14 காலையில் பட்டாச்சார்யர்களால் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது.
தொடர்ந்து இரவு சிம்ம, அனுமார், தங்க கருடசேவை, சேஷ, வெள்ளியானை, தங்க குதிரை, அன்னம் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. ஆறாம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், வெள்ளியானையில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.
ஏப்.23ல் காலை 6:36 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளும், மாலை 4:42 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடைபெறும். ஏப்.25 ல் புஷ்பப் பல்லக்கில் சுவாமி எழுந்தருளலுடன் பிரமோத்ஸவம் நிறைவடையும்.

