/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் இன்று தேரோட்டம்
/
சிங்கம்புணரியில் இன்று தேரோட்டம்
ADDED : மே 19, 2024 10:14 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் இன்று வைகாசி விசாக தேரோட்டம் நடக்கிறது.
சிவகங்கை தேவஸ்தானத்துக்குட்பட்ட சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள் மண்டகப்படியாக நடந்து வரும் விழாவில் ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9 ம் நாளான இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை முன்னிட்டு உற்ஸவர் இன்று காலை முதலே திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தொடர்ந்து மதியம் 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
தேர் நிலையை அடைந்த உடன் பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை ஒரே நேரத்தில் படிகளில் வீசி உடைப்பது இக்கோயிலில் பிரசித்தி பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள், சிவகங்கை தேவஸ்தானம் செய்து வருகின்றனர்.

