ADDED : ஆக 27, 2024 06:21 AM
சிவகங்கை : சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டையில் நாளை மக்களுடன்முதல்வர் திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அன்றைய தினம் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று துறை வாரியான புகார்களை தெரிவிக்கலாம்.
தேவகோட்டை வட்டாரத்தில் மாவிடுதிக்கோட்டை, பனங்குளம், புதுக்குறிச்சி, துானுக்குடி, திடக்கோட்டை, வெட்டிவயல், பொன்னலிக்கோட்டை, சிறுநல்லுார் கிராமத்திற்கு மாவிடுதிக்கோட்டை சமுதாயக்கூடம், சிவகங்கை வட்டாரத்தில் அரசனி முத்துபட்டி, மாங்குடி, குடஞ்சாடி, காட்டு நெடுங்குளம், வல்லனேரி, பூங்குளம், கொட்டகுடி கீழ்ப்பாத்தி கிராமங்களுக்கு முத்துபட்டி சமுதாயக்கூடத்திலும், காளையார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட காளையார்கோவில், சூசையப்பர் பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு சூசையப்பர் பட்டினம் தங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறும்.