ADDED : மே 05, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : சிவகங்கை ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன்.
சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில்பிளஸ் 2 படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். போஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர்கள் 3 பேரும் ஆவரங்காடு மாரியம்மன்கோயில் அருகே கையில் ஆயுதங்களுடன் பொதுமக்கள் செல்லும் வழியில் அசிங்கமாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.