/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மிளகாய் 17.33 லட்சம் டன் விளைச்சல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தகவல்
/
மிளகாய் 17.33 லட்சம் டன் விளைச்சல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தகவல்
மிளகாய் 17.33 லட்சம் டன் விளைச்சல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தகவல்
மிளகாய் 17.33 லட்சம் டன் விளைச்சல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தகவல்
ADDED : ஆக 21, 2024 08:48 PM

சிவகங்கை:''நம்நாட்டில், 2023 ---- 2024ம் ஆண்டில், 17 லட்சத்து, 33,500 டன் மிளகாய் விளைச்சல் இருந்த நிலையில், ஆந்திராவில் இருந்து மட்டுமே, 4.10 லட்சம் டன் விளைந்துள்ளது,'' என, காளையார்கோவிலில் நடந்த ஏற்றுமதிக்கு உகந்த மிளகாய் சாகுபடி கருத்தரங்கில், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: உலக நாடுகளின் மிளகாய் தேவையில், 14 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. இங்கு குண்டூர், தேஜா, என்.எஸ்.,1701, காஷ்மீர் ரக மிளகாய் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. நாட்டில் 4,052, உலகளவில், 7,275 ஏற்றுமதியாளர்கள் மிளகாய் வாங்குகின்றனர்.
சவுதி, கத்தார், ஓமன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் அதிகளவில் இறக்குமதி செய்கின்றன. மிளகாய் ஏற்றுமதியாளர்களுக்கு அரசு, ஏற்றுமதி மதிப்பில் கிலோவிற்கு, ரூ.1.03 வரிச்சலுகை அல்லது ஏற்றுமதி மதிப்பு தொகையில், 2 சதவீதம் சலுகை அளிக்கிறது.
மிளகாய் ஏற்றுமதிக்காக வங்கி கடன் பெற்றிருந்தால், அதற்கான வட்டி தொகையையும் அரசு மானியமாக வழங்குகிறது. மிளகாய் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத், கர்நாடகா உள்ளது. கடந்த 2023- - 2024 ம் ஆண்டில் மிளகாய் வத்தல் ஏற்றுமதி மூலம் மட்டுமே, இந்தியாவிற்கு அந்நிய செலாவணியாக, ரூ.6,100 கோடி கிடைத்துள்ளது.
நறுமண பொருட்கள் ஏற்றுமதியில், 31 சதவீதத்தை மிளகாய் பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்த மிளகாய் விளைச்சலில் பெரும்பகுதி ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தே கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.