நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சி.எஸ்.ஐ., டார்லிங் செல்வபாய் டேவிட் செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
மாவட்ட சட்டப்பணிகள் குழு நீதிபதி சுப்பையா முன்னிலை வகித்தார்.சி.எஸ்.ஐ.,சர்ச் குருவானவர் அகஸ்டின் குணசீலன் ஆரம்ப ஜெபத்தை நடத்தி வைத்து கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார்.
பள்ளி தாளாளர் சாமிதாஸ் வரவேற்றார். விழாவில் ஆசிரியர்கள், பணியாளர்கள், செவித்திறன் குறைவுடைய மாணவர்களின் சிறப்புப்பாடல் இசை மீட்டுதல், குறுநாடகம், குழு நடனம் நடைபெற்றன. கலை நிகழ்ச்சி நடத்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை மெர்ஸி ஜெயசீலி நன்றி கூறினார்.