ADDED : மே 18, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் நேற்று மதியம் 2:30 மணிக்கு மெயின் பஜாரில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி பார்சல் வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று சாப்பிட்ட போது பிரியாணிக்குள் கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் ஓட்டல் உரிமையாளரிடம் முறையிட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறினார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் ஓட்டல்களில் சோதனை செய்து சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

