/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்திற்கு வசூல்; ஊராட்சி தலைவர்கள் குமுறல்
/
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்திற்கு வசூல்; ஊராட்சி தலைவர்கள் குமுறல்
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்திற்கு வசூல்; ஊராட்சி தலைவர்கள் குமுறல்
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்திற்கு வசூல்; ஊராட்சி தலைவர்கள் குமுறல்
ADDED : ஆக 13, 2024 11:16 PM
மானாமதுரை : சிவகங்கை மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் நடக்கும் மக்களுடன் முதல்வர் முகாமிற்கு அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்களிடம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பணம் வசூல் செய்வதாக ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், திருப்புத்துார், சிங்கம்புணரி, காரைக்குடி, தேவகோட்டை கண்ணங்குடி,சிவகங்கை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த ஊரகப்பகுதிகளுக்கு ஒரு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் அரசு துறைகளின் சார்பில் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்று தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.
இந்த முகாம் நடைபெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சி தலைவர்களிடமும் அந்தந்த பகுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை வசூல் செய்வதாக ஊராட்சி தலைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் கூறுகையில், கடந்த 2 வருடங்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் போதுமான பண வசதி இல்லாத காரணத்தினால் ஊராட்சியில் வேலை செய்யும் செயலாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் மக்களுடன் முதல்வர் முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கட்டாயமாக பணம் வசூல் செய்கின்றனர். செலவுக்கான பில்லும் வழங்கப்படுவது கிடையாது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துவதற்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. முகாம் நடைபெறும் இடங்களில் கணினி வசதி ஏற்படுத்திக் கொடுத்தல், சாப்பாடு வசதி, மைக் செட், இருக்கைகள், முகாம் நடைபெறும் மண்டபங்களுக்கு வாடகை கொடுத்தல் மற்றும் பல்வேறு வகையான செலவுகளுக்காக ஊராட்சி தலைவர்களிடம் பணம் வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.