/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுப்பதிவன்று அலைபேசிக்கு தடை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
/
ஓட்டுப்பதிவன்று அலைபேசிக்கு தடை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ஓட்டுப்பதிவன்று அலைபேசிக்கு தடை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ஓட்டுப்பதிவன்று அலைபேசிக்கு தடை கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ADDED : ஏப் 18, 2024 06:17 AM
சிவகங்கை: ''லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவன்று ஏஜன்ட்கள் ஓட்டுச்சாவடிக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவன்று வேட்பாளர், அவர்களது ஏஜன்ட்கள் எப்படி நடந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
இதில் கலெக்டர் கூறியதாவது: ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் தான் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறக்கலாம். அங்கு 1 மேஜை, 2 நாற்காலி மட்டுமே பயன்படுத்தலாம். வாக்காளர் வசதிக்காக வாகனங்களை வேட்பாளரின் முகவர்கள் பயன்படுத்த கூடாது. வேட்பாளர் ஒருவர் ஏஜன்ட், இரண்டு மாற்று ஏஜன்ட்களை நியமிக்கலாம். அந்த மூன்று பேரில் ஒருவர் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள் இருக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் ஓட்டுப்பதிவு நாளான்று, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு அதிகாலை 5:30 மணிக்கு முன் வந்து விடவேண்டும். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரால், ஒவ்வொரு ஏஜன்ட்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஓட்டுச்சாவடிக்குள் பயன்படுத்த கூடிய பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஓட்டுச்சாவடிக்குள் அலைபேசி பயன்படுத்த கூடாது. பார்வை திறன் அற்ற வாக்காளர் ஓட்டளிக்க, உதவியாக ஒரு நபரை (18 வயது முடிந்தவர்) அழைத்து வரலாம்.
தேர்தல் முடிந்ததும், பூத் ஏஜன்ட்கள் 17 சி., படிவத்தை பெற வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பின்னால் அனுமதிக்கப்பட்ட ஏஜன்ட்கள் மட்டுமே செல்ல வேண்டும். காரைக்குடியில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் 'சிசிடிவி' கேமரா பொருத்தி, கண்காணிக்கப்படுகிறது. ஓட்டுப்பெட்டிகளை அங்கு வைத்த பின், 'டிவி' மூலம் பார்த்து கொள்ளலாம். இந்த விதிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.

