/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கலெக்டர் தகவல்

ADDED : மார் 03, 2025 06:43 AM
சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., பணி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது,சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். இப்பயிற்சி வகுப்புகள் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, வி.ஏ.ஓ., பணிக்கான போட்டி தேர்வு 2025 ஜூலை 13 ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும்.
இப்பயிற்சி மையத்தில் பாட வாரியான பயிற்சி தேர்வு, மாநில அளவிலான பொது மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பெயரினை பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.